உள்ளடக்கத்துக்குச் செல்

மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலம் (Very long chain fatty acid) 22 அல்லது அதற்கு மேற்பட்ட கார்பன்களைக் கொண்டிருக்கும் கொழுப்பு அமிலமாகும். இவற்றின் உயிரியக்கவியல் எண்டோபிளாசுமிக் ரெட்டிகுலம் எனப்படும் அகக்கணிக வலையில் நிகழ்கிறது[1]. மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் ஒரு செல்லின் மொத்த கொழுப்பு அமில உள்ளடக்கத்தில் சிறு சதவிகிதம் வரை பிரதிபலிக்கக்கூடும்[2]. பெரும்பாலான கொழுப்பு அமிலங்களைப் போலல்லாமல் மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் மைட்டோகாண்ட்ரியாவில் வளர்சிதை மாற்றமடைய மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் இவை சைட்டோபிளாசம் எனப்படும் உயிரணுக்கணிகத்திலுள்ள பெராக்சிசோம்களில் கண்டிப்பாக வளர்சிதை மாற்றமடைய வேண்டும்.

எக்சு குரோமோசோமுடன் தொடர்புடைய அட்ரினோலியுக்கோடிசுட்ரோபி நோய் மற்றும் செயல்படும் பெராக்சிசோம்கள் குறைவுடன் தொடர்புடைய செல்வெகர் நோய்க்குறி போன்ற சில பெராக்சிசோமல் கோளாறுகள் மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களின் திரட்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் [3][4].

முக்கியமான மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள்

[தொகு]

24 கார்பன்களைக் கொண்டிருக்கும் இலிக்னோசெரிக் அமிலம், 28 கார்பன்களைக் கொண்டிருக்கும் மண்டானிக் அமிலம், 30 கார்பன்களைக் கொண்டிருக்கும் மெலிசிக் அமிலம், 32 கார்பன்களைக் கொண்டிருக்கும் இலேசெரோயிக் அமிலம், 34 கார்பன்களைக் கொண்டிருக்கும் கெதோயிக் அமிலம், 35 கார்பன்களைக் கொண்டிருக்கும் செரோபிளாசுடிக் அமிலம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும். செரோபிளாசுடிக் அமிலத்தில் மட்டும் கார்பன் ஒற்றைப்படை எண்ணிக்கையில் உள்ளது. இவைதவிர பல ஒற்றை நிறைவுறா மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களும் அறியப்படுகின்றன. நெர்வோனிக் அமிலம் (Δ15-24:1), சைமெனிக் அமிலம் (Δ17-26:1), இல்லுமெகியூயிக் அமிலம் (Δ21-30:1) போன்றவை ஒற்றை நிறைவுறா மிக நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்[5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jakobsson, Andreas; Westerberg, Rolf; Jacobsson, Anders "Fatty acid elongases in mammals: their regulation and roles in metabolism" Progress in Lipid Research 2006, volume 45, pp. 237-249. எஆசு:10.1016/j.plipres.2006.01.004
  2. "Very-long-chain fatty acids from the animal and plant kingdoms" Rezanka, Tomas Progress in Lipid Research 1989, volume 28, pp. 147-87. எஆசு:10.1016/0163-7827(89)90011-8
  3. Kemp, Stephan and Watkins, Paul. "Very long-chain fatty acids". X-ald Database. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "Very long-chain acyl-CoA dehydrogenase deficiency". Genetics Home Reference, National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
  5. Řezanka, Tomáš; Sigler, Karel (2009). "Odd-Numbered Very-Long-Chain Fatty Acids from the Microbial, Animal and Plant Kingdoms". Progress in Lipid Research 48 (3–4): 206–238. doi:10.1016/j.plipres.2009.03.003. பப்மெட்:19336244.